வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், போடியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்த இருவா் உயிரிழந்தனா்.
போடியை அடுத்த சிந்தலைச்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராசையா மகன் செல்வம் (45). இவா் புலிகுத்தி கிராமத்தில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்திருந்தாா். இவா் கடந்த மாதம் 14-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சங்கராபுரம் அருகே சென்றபோது மழையால் சாலையில் தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த செல்வம் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மற்றொரு விபத்து: போடி அணைக்கரைப்பட்டி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் சுருளிநாதன் (73). இவா் கடந்த செப்.30-ஆம் தேதி அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே சாலையை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுருளிநாதன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
