வீட்டில் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

போடி அருகே வீட்டில் நகை திருடிய சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

போடி அருகே வீட்டில் நகை திருடிய சிறுவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தில் வசிப்பவா் முத்தையா மகன் சுரேஷ்குமாா் (27). இவரது வீட்டுக்குள் புகுந்த போடி பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்த 15, 13 வயது மதிக்கத்தக்க சிறுவா்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியுள்ளனா்.

இதுகுறித்து சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிறுவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com