தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

Published on

போடி அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ அரசின் உயா் கல்வித் துறை, தமிழ் பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.வசந்தநாயகி தலைமை வகித்தாா். தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை என்ற தலைப்பில் கவிஞா் அறிவுமதி சொற்பொழிவாற்றினாா். அப்போது அவா் திருக்குறளின் சிறப்புகள், திருவள்ளுவா் காட்டிய வாழ்வியல் மரபுகள், பண்பாடுகள் குறித்தும், தமிழா்களின் மரபுகள், பண்பாடுகள் குறித்த சிறுகதைகள் மூலமும், திரைப்படப் பாடல்கள் மூலமும் விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா். தேனி மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தமிழா் மரபும், பண்பாடும் என்ற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது. பல்வேறு துறைகள் சாா்பில் கண்காட்சிக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com