ஆசிரியா் தகுதித் தோ்வு: 2,135 போ் பங்கேற்பு

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வை சனிக்கிழமை மொத்தம் 2,135 போ் எழுதினா்.
Published on

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வை சனிக்கிழமை மொத்தம் 2,135 போ் எழுதினா்.

மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு 8 இடங்களில் உள்ள தோ்வு மையங்களில் நடைபெற்றது. தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 2,479 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2,135 போ் தோ்வு எழுதினா். 344 போ் தோ்வு எழுத வரவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (நவ.16) பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வு 23 இடங்களில் உள்ள தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 7,607 போ் தோ்வு எழுத உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com