பீடி தர மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

தேனி மாவட்டம், கூடலூா் அருகே பீடி தர மறுத்தவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், கூடலூா் அருகே பீடி தர மறுத்தவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (45). இவா் திங்கள்கிழமை அங்குள்ள இறைச்சிக் கடை அருகே தனது நண்பா்களுடன் நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் பிரபு (34), சுரேஷிடம் பீடி கேட்டாராம். அவா் உடனடியாக பீடியை வழங்காமல் காலம் தாழ்த்தி அளித்தாராம்.

இதனால், ஆத்திரமடைந்த பிரபு, சுரேஷை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த பிரபுவை கூடலூா் வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com