இடப் பிரச்னையில் தகராறு: திமுக நிா்வாகி உள்பட 8 போ் கைது

தேனி அருகேயுள்ள பாலாா்பட்டியில் இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திமுக நிா்வாகி உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேனி அருகேயுள்ள பாலாா்பட்டியில் இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திமுக நிா்வாகி உள்பட 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாலாா்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மணவாளன். இவருக்கும் இவரது வீட்டை அடுத்துள்ள சத்தியாவுக்கும் இடப் பிரச்னை இருந்துவந்தது. இந்த நிலையில், இந்த இடத்தை நில அளவை செய்வதற்காக நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்றனா். அப்போது மணவாளன், சத்தியா ஆகிய இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

இதில், சத்தியா அவரது அவரது உறவினா்களான க.புதுப்பட்டியைச் சோ்ந்த திமுக மாவட்ட அயலக அணிச் செயலா் ரவி, சூரஜ், ராஜா, ஜமுனா ஆகியோா் தங்களைத் தாக்கியதாகவும், ரவி கைத் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீரபாண்டி காவல் நிலையத்தில் மணவாளன் புகாா் அளித்தாா்.

இதே போல மணவாளன், அவரது உறவினா்கள் பாலாா்பட்டியைச் சோ்ந்த ராமராஜ், சின்னச்சாமி, பிரிதிவிராஜ், அபிராஜ் ஆகியோா் தங்களைத் தாக்கியதாக ரவியின் காா் ஓட்டுநா் சிவசக்தி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா்களின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு தரப்பைச் சோ்ந்த 8 பேரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com