கூடலூரில் 90 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

Published on

தேனி மாவட்டம் கூடலூரில் 90 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கூடலூரில் புகையிலைப் பொருள்கள் பொதுமக்களிடம் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கூடலூா் வடக்கு போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது, குள்ளப்பகவுண்டன்பட்டியில் தனியாா் தோட்டத்து அறையில் பதுக்கி வைத்திருந்த 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த வீமத்தேவா் மகன்களான ஈஸ்வரன் (55), ஞானசேகரன்(53) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது பல்வேறு குற்ற வழக்குள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com