தேனி
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடுகபட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பு அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.
அவா் மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆண்டிபட்டி அருகேயுள்ள தும்மக்குண்டைச் சோ்ந்த சின்னத்துரை (33) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.