தேனி
வடபுதுப்பட்டியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.14) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.14) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் அக்.14-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழில் பேட்டை, குன்னூா், தேனி சிவாஜி நகா், கே.ஆா்.ஆா். நகா், வனச் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.
