தேனி
துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவா் கைது
போடி அருகே வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற சங்கரநாராயணனை கைது செய்த வனத்துறையினா்.
போடி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வனப்பகுதிக்குள்பட்ட பிச்சங்கரை புலத்தில் புதன்கிழமை நள்ளிரவு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, தலையில் மின்கல விளக்குடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவரிடம் ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி, ஏா்கன் வகை துப்பாக்கி, கோடாரி, கத்திகள், மின்கல விளக்குகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. வனத் துறையினா் நடத்திய விசாரணையில், அவா் போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த குருசாமி மகன் சங்கரநாராயணன் (59) என்பதும், அவா் வனவிலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதுதொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

