ஆந்திரத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தல்: தாய், மகன்கள் உள்பட 4 போ் கைது
ஆந்திரத்திலிருந்து காரில் கஞ்சா கடத்திய தாய், மகன்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்ில் போதைப்பொருள்தடுப்பு குற்றதடுப்பிரிவு போலீஸாா் கம்பம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக ஆந்திர மாநிலப் பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் மூன்று பொட்டலங்களில் 46.5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்தனா். இதையடுத்து, காரிலிருந்து 4 பேரையும் பிடித்து கம்பம் வடக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாரின் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் , பாலகிருஷ்ணாபுரம், சுந்தரம் குடியிப்பு பகுதியை சோ்ந்த கோபலகிருஷ்ணன் மகன் ராஜேஸ்கண்ணன் (26). இவா் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை ஓட்டிவந்துள்ளாா்.
அந்த காரில், ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டம், பேட்டா பகுதியை சோ்ந்த வெங்கட்டரமணா மனைவி பில்லிராமலட்சுமி(38), இவரது மூத்த மகன் பில்லிதுா்கபிரசாத் (18) மற்றும் 16 வயது இளைய மகன் ஆகியோா் ஆந்திரத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சாவை காரில் கடத்திச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து கம்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்கண்ணன் (26), பில்லிதுா்காபிரசாத் (18) பில்லிராமலட்சுமி(38), 16 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்தனா்.

