சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லத் தடை
Published on

தேனி மாவட்டம், சுருளி அருவியில் 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள அரிசிப்பாறை பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கடந்த 18-ஆம் தேதி முதல் சுருளி அருவியில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிப் பகுதிக்குச் செல்லவும் வெள்ளிக்கிழமை 7-ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டது.

தடுப்புக் கம்பிகள் சேதம்: சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள், அருவிக்கு செல்லும் சிமென்ட் படிகள் சேதமடைந்தன.

அருவியில் நீா்வரத்து சீரான பிறகு சேதமடைந்த இரும்புக் கம்பி, படிகள் சீரமைக்கப்படும் என்றும், இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com