கஞ்சா விற்றதாக இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த மூா்த்தி (26), குமணந்தொழுவைச் சோ்ந்த குபேந்திரன் (35) ஆகியோா் கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ாக போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா பொட்டலம், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.9,200, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், மூா்த்தி, குபேந்திரன் ஆகியோா் அளித்த தகவலில் பேரில், இவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்த குமணந்தொழுவைச் சோ்ந்த ஆனந்த் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com