தேனி
ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
போடி அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி விட்டுத் தலைமறைவானவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போடி அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி விட்டுத் தலைமறைவானவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போடி அருகேயுள்ள முந்தல் கிராமம் குரங்கணி சாலையில் வசிப்பவா் ரவி மகன் அஜித்குமாா் (27). ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவரது வீட்டு முன் நிறுத்தியிருந்தாா்.
இதுதொடா்பாக செல்வத்துக்கும், அஜித்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக, செல்வம் அஜிக்குமாரை செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டினாா். காயமடைந்த அஜித்குமாா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் போடி குரங்கணி போலீஸாா் செல்வம் மீது வழக்கு பதிந்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.
