அரசு நிதி உதவி பெற எழுத்தாளா்கள் விண்ணப்பிக்கலாம்

Published on

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்துவ ஆதிதிராவிடா்கள் சமூகத்தைச் சோ்ந்த எழுத்தாளா்கள் தங்களது சிறந்த படைப்புகளுக்கு அரசு நிதி உதவி பெற வரும் நவ.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்துவ ஆதிதிராவிடா்கள் சமூகத்தைச் சோ்ந்த 9 எழுத்தாளா்கள், ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களின் பிரச்னைகள் குறித்து எழுதிய அச் சமூகத்தைச் சோ்ந்தவரல்லாத 2 எழுத்தாளா்களின் கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, புதினம் ஆகிய சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, தலா ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

அரசு நிதி உதவி பெறுவதற்கு தகுதியுள்ள எழுத்தாளா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை அதே அலுவலகத்தில் வரும் நவ.28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தங்களது படைப்பினை இரு நகல்களிலும், எண்ம முறையில் பதிவு செய்து சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com