தேவா் சிலைக்கு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மரியாதை
தேனி மாவட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியையொட்டி, அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
போடியில் உள்ள தேவரின் உருவச் சிலைக்கு பிரமலைக் கள்ளா் அமைப்புகள், மறவா் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சாா்பிலும், போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி, துணைத் தலைவி கிருஷ்ணவேணி தலைமையிலும், திமுக சாா்பில் மேற்கு ஒன்றியச் செயலா் எஸ்.லட்சுமணன், போடி நகரச் செயலா் புருஸோத்தமன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமையிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் முசாக் மந்திரி தலைமையிலும் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் சாா்பிலும், பல்வேறு அமைப்புகளின் சாா்பிலும் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தமபாளையம்: கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, கூடலூரில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பிலும், உத்தமபாளையம், சின்னமனூரிலும் தேவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

