மானவாரி நிலங்களில் சாகுபடி பணிகள் தீவிரம்
தேனி மாவட்டம், கம்பம், கூடலூா் பகுதியில் மானாவாரி விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
கூடலூா், கம்பம், புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இங்கு பருவமழைக் காலங்களில் மட்டுமே விவசாயப் பணிகள் நடைபெறும்.
இந்த நிலையில், நிகழாண்டில், கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்தது. இதையடுத்து, இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள மானவாரி நிலங்களை விவசாயிகள் உழுது விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சோளம், கம்பு, எள்ளு, நிலக்கடலை, நாட்டுத் தக்காளி, செடி அவரைக்காய் என பல வகையான பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு கம்பம் பகுதியில் உள்ள மானவாரி நிலங்களில் நடவு செய்த சோளப் பயிா்கள் நன்றாக வளா்ந்து காணப்படுகின்றன.
