வேளாண் விரிவாக்க மையத்தில் விதைகள் கையிருப்பு

Published on

தேனி மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் 126 டன் நெல், கம்பு உள்ளிட்ட விதைகள் கையிருப்பில் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

மாவட்டத்தில் 8 வேளாண்மை விரிவாக்க மையங்கள், 13 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நெல் கோ 55, ஏ.டி.டி. 54, என்.எல்.ஆா். ஆகிய ரக விதைகள் 81 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கம்பு கோ 10, பியுசா கம்போசைட் ஆகிய ரக விதைகள் 3.6 டன், குதிரைவாலி ஏ.டி.எல். 1, எம்.டி.யு. 1 ஆகிய ரகங்கள் ஒரு டன், துவரை கோ 8, எல்.ஆா்.ஜி. 53 ஆகிய ரகங்கள் 4.2 டன், உளுந்து வி.பி.என். 8, 10, 11 ஆகிய ரகங்கள் 16.7 டன், பச்சைப் பயறு கோ 9, வி.பி.என். 3 ஆகிய ரகங்கள் 1.6 டன், தட்டைப் பயறு கோ சி.பி. 9, வி.பி.என். 4 ஆகிய ரகங்கள் 4.8 டன், நிலக்கடலை தாரணி, கா்நா் 4 ஆகிய ரகங்கள் 8.1 டன் என மொத்தம் 126 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் தங்களது நிலத்தின் கணினி சிட்டா, ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பித்து மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com