தேனி
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் தண்ணீா் வரத்து சீரானதால் 13 நாள்களுக்கு பிறகு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக, சுருளி அருவியில் கடந்த 18-ஆம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அருவிக்கு தண்ணீா் வரத்து சீரானதால், கம்பம் மேற்கு வனச் சரகம் சாா்பில், அருவியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், 13 நாள்களுக்கு பிறகு, வெள்ளிக்கிழமை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி வழங்கினா். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
