பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் ரூபன்குமாா் (30). இவா் தேனி நகராட்சி சந்தை வளாகத்தில் மரக்கடை வைத்து நடத்தி வந்தாா். இந்த நிலையில், ரூபன்குமாா் பழனிசெட்டிபட்டியிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, பூதிப்புரம் விலக்கு அருகே கம்பம் சாலையில் எதிா் திசையிலிருந்து பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பன் மகன் ராமசாமி ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், ரூபன்குமாா் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரூபன்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரு சக்கர வாகன ஓட்டுநா் ராமசாமி மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
