தேனி
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
உத்தமபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சூா்யதிலகராணி தலைமையிலான போலீஸாா் அனுமந்தன்பட்டி பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த மகேந்திரனை (56) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
