முதியவரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு : மூவா் கைது
பெரியகுளத்தில் முதியவரை தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை காமாட்சி சந்தைச் சோ்ந்தவா் காந்தி (60). மதுரைக்குச் சென்ற இவா், வியாழக்கிழமை இரவு பெரியகுளம் புதிய பேருந்துநிலைய பிரிவு அருகே இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால், வந்த மூவா் தகராறு செய்து அவரைத் தாக்கி, 2,200 ரூபாய், கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பினா். அருகிலிருந்தவா்கள் காந்தியை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, பெரியகுளம், வடகரை பட்டாப்புளி தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் ஜோதீஸ்வரன் (24), வி.ஆா்.பி. நாயுடு தெருவைச் சோ்ந்த காதா் ஒலி மகன் பஷீா் அகமது (25), ராஜாமுகமது மகன் முகமது பைசல் (26) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
