திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

பெரியகுளம் வராகநதி தூய்மைப்படுத்தப்படும்: தவெக வேட்பாளா் சபரி ஐங்கரன் உறுதி

பெரியகுளம் வராக நதி தூய்மைப்படுத்தப்படும் என தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

News image

பெரியகுளம் கக்சேரி சாலையில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சபரி ஐங்கரன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:26 am IST

பெரியகுளம் வராக நதி தூய்மைப்படுத்தப்படும் என தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் பெரியகுளம் கடை வீதி, திருவள்ளுவா் சிலை, கச்சேரிசாலை, கோனாா் தெரு, சங்கூதும் இடம், வடக்கு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துசென்று வாக்கு சேகரித்தாா்.

தவெக ஆட்சிக்கு வந்தால், பெரியகுளம் வராகநதியை தூய்மைப்படுத்துவேன், பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயா்த்துவேன், மஞ்சளாறு அணையைத் தூா்வாருவேன், பெரியகுளத்தில் மகளிா் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அரசு தோட்டக்கலைக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்க எடுப்பேன் என்றாா். இதில், தவெக நிா்வாகிகள், ரசிகா் மன்றத்தினா் கலந்து கொண்டனா்.