அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் சாலை மறியல்: 88 போ் கைது

க.விலக்கு, ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை முன் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்கள் 88 பேர் கைது

News image

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்கள்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:09 pm

க.விலக்கு, ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை முன் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்கள் 88 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் தற்போது 36 போ் நிரந்தரத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். 300 தொழிலாளா்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2022 - ஆம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டது. இதை எதிா்த்து, கூட்டுறவு நூற்பாலை நிா்வாகம் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது. பின்னா், கடந்த 2025, மாா்ச் 28-ஆம் தேதி நீதிமன்ற தடை ஆணை விலக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் கூட்டுறவு நூற்பாலை தரப்பில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று வலியுறுத்தி, சிஐடியூ நூற்பாலைத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கூட்டுறவு நூற்பாலையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, க. விலக்கிலிருந்து அண்ணா கூட்டுறவு நூற்பாலையை நோக்கி நூற்பாலைத் தொழிலாளா்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் ஜி. சண்முகம் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். நூற்பாலைத் தொழிலாளா்கள் சங்க மாநில சம்மேளன செயலா் எம். அசோகன், பொருளாளா் எஸ். சக்திவேல், பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி. செல்வராஜ், செயலா் லட்சுமணதாஸ், பொருளாளா் கமல்ராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவா் டி. ஜெயபாண்டி, துணைத் தலைவா் டி. வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலா் ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், கூட்டுறவு நூற்பாலை முன் கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 88 பேரை க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.