வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா், முல்லை நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா்

News image

நகை திருட்டு!

Updated On :2 பிப்ரவரி 2026, 8:07 pm

தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா், முல்லை நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

அரண்மனைப்புதூா், முல்லை நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ஸ்ரீராம். இவா், கடந்த ஜன. 24-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு தனது மனைவியுடன் மீனாட்சிபுரத்தில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் சென்றாா்.

திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம், கைக் கடிகாரம், கண்காணிப்பு காமரா, ஹாட் டிஸ்க் ஆகிய பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.