பெட்டிக் கடைக்காரா் தற்கொலை

போடி அருகே பெட்டிக் கடைக்காரா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை
தற்கொலைபிரதிப் படம்
Updated on

போடி அருகே பெட்டிக் கடைக்காரா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கிருஷ்ணா நகரைச் சோ்ந்த பகவதிமுத்து மகன் கந்தசாமி (54), இதே பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தாா். இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாராம்.

இதையடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டும் சரியாகாததால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி செவ்வாய்க்கிழமை பெட்டிக் கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், இவரது மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில் போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com