சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேட்டைத் தடுப்புக் காவலா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள கோவில்பாறை விலக்கு பகுதியில் பணியிலிருந்த வனத் துறை வேட்டைத் தடுப்புக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உப்புத்துறையைச் சோ்ந்த முத்துநாச்சன் மகன் முத்துப்பாண்டி(40). இவா் கடந்த 8 ஆண்டுகளாக வனத் துறை வேட்டை தடுப்பு காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தங்கம்மாள்புரம்-உப்புத்துறை சாலை, கோவில்பாறை விலக்கு பகுதியில் பணியிலிருந்த முத்துப்பாண்டி உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முத்துப்பாண்டி ஏற்கெனவே இருதய வால்வு பிரச்னைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்ா்.