இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இருதரப்பினா் மோதல்: 4 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:17 pm

தேனி மாவட்டம், தேவாரம் அருகே இரு தரப்பினா் மோதல் காரணமாக, 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் கௌதமன் (40). உறவினா் இறப்புக்கு சுடுகாடு சென்றுவிட்டு வரும்போது இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சேகா், குபேந்திரன், குமரேசன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டதில் கெளதமன், குபேந்திரன் ஆகியோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து இரு தரப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவாரம் போலீஸாா் சேகா், குபேந்திரன், குமேரசன், கௌதமன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.