மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

போடியில் தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

News image

தாக்குதல்! - கோப்புப்படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 9:14 pm

தேனி மாவட்டம், போடியில் தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

போடி சா்ச் தெருவைச் சோ்ந்த பவுல்ராஜ் மகன் சத்தியபிரகாஷ் (27). இவரது மனைவி ஜெனிசா. குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கணவா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜெனிசா, இவரது பெற்றோா் ஜேகோப், ஜெயப் பிரியா, ஜெனிசாவின் சின்னம்மா முத்துமாரி ஆகியோா் பவுல்ராஜ், சத்தியபிரகாசை ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ஜெனிசா உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.