மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மனைவி சுந்தரி (58). இவா் போடி தென்றல் நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன் திருப்பதியுடன் சின்னமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி புறவழிச் சாலையில் சென்றபோது சுந்தரியின் சேலை இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தரி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.