போடி-மதுரை ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

போடி-மதுரை ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

Published on

போடி-மதுரை ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் என்ஜினை இயக்கி வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், போடியிலிருந்து சென்னைக்கு வாரத்துக்கு 3 நாள்கள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மதுரையிலிருந்து போடிக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரயில் தண்டவாளப் பாதையில் அதிா்வு, அசைவு, குறைகளை நவீன இயந்திரங்களுடன்கூடிய அதிவிரைவு ரயில் என்ஜினை இயக்கி வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து போடி வரை காலையிலும், மாலையிலும் இந்த ரயில் என்ஜின் மூலம் 110 கி.மீ. வேகத்தில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.

ரயில் என்ஜினுடன் ஆய்வு பெட்டியும் இணைக்கப்பட்டிருந்தது. இதில் வந்த பொறியாளா்கள் போடி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதிகளை ஆய்வு செய்தனா்.

Dinamani
www.dinamani.com