திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரபாண்டியில் திமுக, இதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி பிரதானச் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதாக மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதில் திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக கூட்டணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.