எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கண்டனம்

News image
கம்பத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி எம்.பி. சிவா. உடன் கட்சி நிா்வாகிகள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவையில் உரிய தகவல்களைத் தெரிவிக்காத மத்திய வா்த்தகத் துறை அமைச்சரின் செயல், உரிமை மீறல் என திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் சிவா கண்டனம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் செல்வேந்திரன், கம்பம் நகரச் செயலா்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா, சின்னமனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் சிவா பேசியதாவது:

இந்தியாவின் ஒட்டுமொத்த வருமானத்தில், தமிழ்நாடு செலுத்தும் வரியில் ரூ.9.04-ஐ மட்டுமே மத்திய அரசு திருப்பித் தருகிறது. ஆனால், பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதலாகக் கொடுக்கிறது.

புதியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கான நிதி ரூ.3,400 கோடியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் மக்களவையில் உரிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இந்தச் செயல் உரிமை மீறல் ஆகும்.

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், பொங்கல் பரிசு, காலை உணவுத் திட்டம் என பல திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.