தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூா் அருகே காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியைச் சோ்ந்தவா் சுனில் (52). இவா், தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் குடும்பத்துடன் தங்கி மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கேரளத்துக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை அதிகாலையில் காரில் சிலமலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, லோயா் கேம்ப் பகுதியில் சபரிமலைக்குச் சென்ற வேன், காா் மீது மோதியதில் சுனில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வேனில் இருந்த செளந்தா் (37), செங்கோட்டையன்(49), ஓட்டுநா் வினோத்குமாா் (35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.