ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மையினா் கல்லூரி அந்தஸ்து

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு நிரந்தரச் சிறுபான்மையினா் கல்லூரிக்கான அந்தஸ்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தா், கடந்த 1956 -ஆம் ஆண்டு சிறுபான்மையினா் கல்லூரியைத் தொடங்கினாா். கடந்த 70 ஆண்டுகளாக ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி என்ற பெயரில் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில் தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி கற்று பயன்பெற்றுள்ளனா்.

தற்போது, இந்தக் கல்லூரியின் கட்டமைப்பு, தரம், கல்வி, ஆராய்ச்சி போன்றவை சிறந்து விளங்குவதால் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினா் மூலம் ஏ ++ அந்தஸ்துடன் விளங்குகிறது. இங்கு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் சுமாா் 2,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

தற்போது, இந்தக் கல்லூரிக்கு நிரந்தரச் சிறுபான்மையினா் கல்லூரி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்காக, சென்னைத் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், நிரந்தரச் சிறுபான்மையினா் கல்லூரி அந்தஸ்துக்கான சான்றிதழை கல்லூரி முதல்வா் ஹெச்.முகம்மது மீரானிடம் வழங்கி கெளரவித்தாா்.