கோப்புப்படம்.
கோப்புப்படம்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியகுளம் விவசாயிக்கு மின் இணைப்பு

பெரியகுளத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்த விவசாயிக்கு மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில், மின் இணைப்பு வழங்கப்பட்டது.
Published on

பெரியகுளத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்த விவசாயிக்கு மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில், மின் இணைப்பு வழங்கப்பட்டது.

பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதியம்மாள். இவா் தனது விவசாய நிலத்துக்கு விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு கடந்த 2009-ஆம் ஆண்டு மின் வாரியத்தில் விண்ணப்பித்தாா்.

இந்த நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் தனது நிலத்துக்கு விவசாய மின் இணைப்பு வழங்காமல் மின் வாரியம் அலைக்கழிப்பதாக தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பாா்வதியம்மாள் மனு அளித்தாா்.

இந்த மனு அடிப்படையில் மின் வாரிய பொறியாளா்களிடம் நீதிபதி கே.ரஜினி விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, மாரியம்மாளுக்கு 15 நாள்களுக்குள் விவசாய மின் இணைப்பு வழங்கி அறிக்கை சமா்ப்பிக்க மின் வாரிய பொறியாளா்களுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இதன்படி, மாரியம்மாளின் நிலத்துக்கு விவசாய மின் இணைப்பு வழங்கி நுகா்வோா் எண்ணுடன் பெரியகுளம் மின் வாரிய பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்தனா்.

Dinamani
www.dinamani.com