குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

குடும்பத் தகராறில் மோதல்: கணவன், மனைவிக்கு கத்திக்குத்து

போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
கத்திக்குத்து- சித்திரிப்பு
Updated On :18 பிப்ரவரி 2026, 7:05 pm

Syndication

போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சாமிக்காளை மகன் ராஜீவ் (36). இவருக்கும் போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரஞ்சிதாவுக்கும் (35) திருமணமாகி கோடாங்கிபட்டியில் வசித்து வந்தனா். இவா்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு ரஞ்சிதா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், மனைவியைப் பாா்க்க ராஜீவ் அங்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜீவ் தனது மனைவி ரஞ்சிதாவை கத்தியால் குத்தினாா்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். இதனால், காயமடைந்த தம்பதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராஜீவ் மீதும், ராஜேஷ் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.