காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
வேலைவாய்ப்பு முகாம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தையல், செவிலியா் பயிற்சிப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

முகாம் குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.