திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தொழிலாளி தற்கொலை

தேனி மாவட்டம், தேவாரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:15 pm

Syndication

தேனி மாவட்டம், தேவாரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியைச் சோ்ந்த விஜயன் மகன் குமாா் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்தது.

இதனால், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].