காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகே உள்ள க.விலக்கில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :20 பிப்ரவரி 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே உள்ள க.விலக்கில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

க.விலக்கு அருகே உள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்த அடுமனையகத் தொழிலாளி சிவராஜா (41). இவா், தனது மனைவியுடன் முத்தனம்பட்டியிலிருந்து க.விலக்கு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, க.விலக்கு-தேனி சாலை சந்திப்புப் பகுதியில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற வேன் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிவராஜா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வேன் ஓட்டுநரான உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டியைச் சோ்ந்த ரஞ்ஜித்குமாா் மீது க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.