தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கூடலூா் குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 2-ஆவது நாளாக தா்னா

கூடலூரில் பள்ளிகள், குடியிருப்புகள் மத்தியிலுள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கூடலூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக கருப்புக் கொடி கட்டி தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:50 pm

தேனி மாவட்டம், கூடலூரில் பள்ளிகள், குடியிருப்புகள் மத்தியிலுள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் நகராட்சியில் 14-ஆவது வாா்டில் உள்ள பெத்துக்குட்டை குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைகளில் அவ்வப்போது தீப்பற்றுவதால், குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், இந்த நகராட்சிக் குப்பைக் கிடங்கை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்திடம் அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் குப்பைக் கிடங்குக்கு செல்லும் சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக தங்களது வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து, கூடலூா் நகராட்சியின் முக்கிய வீதிகளில் பேரணி நடத்த உள்ளோம் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.