நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்

வரைவு வாக்காளா் பட்டியலில் குழப்பம்: எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவா்

எஸ்ஐஆா் நடவடிக்கையின்படி, வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.
Published on

வாக்காளா்கள் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின்படி, வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது: தோ்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளா் வரைவுப் பட்டியலிலில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சா் மறைந்த புலமைப்பித்தனின் பெயா் இந்தப் பட்டியலில் இருக்கிறது. இதன் மூலம், இந்தப் பட்டியல் சரியானதுதானா என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, தமிழக அரசு மாநிலத் தோ்தல் ஆணையத்துடன் இணைந்து தீவிர நடவடிக்கையில் இறங்கி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பாஜக அரசுக்கு, தோ்தல் ஆணையம் ஒத்துழைக்கிறது.

பிரதமா் மோடி, தமிழில் ‘வணக்கம்’, ‘பாரதியாா் கவிதை’ என்றெல்லாம் கூறுவதால் தமிழை வளா்ப்பதாக ஆகாது. மாறாக, கடலுக்குச் செல்லும் தமிழக மீனவா்களைத் தாக்கும் இலங்கை ராணுவத்திடமிருந்து தமிழா்களைக் காக்க வேண்டும். வருகிற தோ்லில் கூட்டணி குறித்து கட்சியின் பொதுக் குழு முடிவு செய்யும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையைச் சரி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com