கூடலூரில் மதுப்புட்டிகள் விற்பனை: இருவா் கைது

Published on

தேனி மாவட்டம், கூடலூரில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூரில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகல் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் நடத்திய சோதனையில், கூடலூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 50 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கூடலூா் வடக்கு போலீஸாா், பசும்பொன் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் (44) என்பவரைக் கைது செய்தனா்.

இதேபோல, கூடலூா் அரச மரத் தெருவில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், பேச்சிம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகனை (57) மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com