சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்டத் தலைவா் ஓ. சாந்தியம்மாள் தலைமையில் அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பதவி உயா்வில் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும், வாக்குச் சாவடி பணியிலிருந்து அங்கன்வாடி ஊழியா்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலா் எம். நாகலட்சுமி, மாவட்டச் செயலா் வளா்மதி, பொருளாளா் சி. நாகலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினா் மகாலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவா் டி. ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 300 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com