தேனி
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் வீரசங்கிலி (46). இவா் பழனிசெட்டிபட்டியில் உள்ள கோழி இறைச்சிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வீரசங்கிலி கோடாங்கிபட்டியில் உள்ள தேனி-போடி பிரதான சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வீரசங்கிலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
