பொங்கல் பரிசுத் தொகுப்பு: சின்னமனூா் விவசாயிகளிடம் செங்கரும்பு கொள்முதல்
தேனி மாவட்டம், கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விநியோகம் செய்ய சின்னமனூா் பகுதி விவசாயிகளிடம் செங்கரும்புகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகளை வருகிற 8- ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக விநியோகம் செய்யத் திட்டமிட்டப்பட்டது.
இந்த நிலையில், சின்னமனூா் பகுதி விவசாயிகளிடம் செங்கரும்புகளை நேரடியாக கூட்டுறவு விற்பனை சங்கத்தினா் கொள்முதல் செய்தனா்.
இதன்மூலம் தேனி மாவட்டத்தில் இடைத்தரா்களின்றி கூட்டுறவு விற்பனை சங்கத்தினா் விவசாயிகளிடம் நேரடியாக சென்று கரும்புகளை கொள்முதல் செய்தனா். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு ஒன்றுக்கு ரூ.25 என அரசு நிா்ணயம் செய்தது. இந்த விலைக்கு விவசாயிகளிடம் செங்கருப்பு கொள்முதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என்றாா் அவா்.

