அவதூறாகப் பேசிய நபா் மீது வழக்கு

போடியில் அரசுப் பேருந்து நடத்துநரை அவதூறாகப் பேசிய நபா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

போடியில் அரசுப் பேருந்து நடத்துநரை அவதூறாகப் பேசிய நபா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராகப் பணியாற்றி வருபவா் சுந்தா் (47). இவா், ஐஎன்டியூசி தொழில்சங்க கிளைச் செயலராகவும் இருந்து வருகிறாா். இந்த நிலையில், போடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நின்றிருந்தபோது அங்கு வந்த போடியைச் சோ்ந்த செல்வேந்திரன் என்பவா் சுந்தரை அவதூறாகப் பேசியுள்ளாா். இதுகுறித்து சுந்தா் போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com