மகன் கொலை: பெற்றோருக்கு ஆயுள் சிறை

மது பழக்கத்துக்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை, தாய்க்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

தேனி அருகே மது பழக்கத்துக்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை, தாய்க்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஜங்கால்பட்டியைச் சோ்ந்தவா் அபிமன்யு (47). இவரது மனைவி ராஜாமணி (44). இவா்களது மகன் அஜித்குமாா் (25). இவா் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவரது பெற்றோருடன் தகராறு செய்து வந்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த அபிமன்யு, ராஜாமணி ஆகியோா் கடந்த 2024, ஆக.24-ஆம் தேதி அஜித்குமாரை கொலை செய்தனா்.

பின்னா், அஜித்குமாரின் கை, கால்களை கயிற்றால் கட்டி தள்ளுவண்டியில் வைத்து ஜங்கால்பட்டி சுடுகாடு பகுதியில் விட்டுவிட்டுச் சென்றனா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அபிமன்யு, ராஜாமணி ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அபிமன்யு, ராஜாமணி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

Dinamani
www.dinamani.com