புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பள்ளபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்ஜித்குமாா் (27). இவரும், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தெருவைச் சோ்ந்த செல்லக்காமுவும் (43) தப்புக்குண்டு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனங்களில் கடத்தியபோது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com