அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக்குகள் மோதல்: அஞ்சலக ஊழியா் பலத்த காயம்

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜனவரி 2026, 7:47 pm

போடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் அஞ்சலக ஊழியா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகே உள்ள வெள்ளைம்மாள்புரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் பொன்ராஜ் (35). இவா் போடி தலைமை அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை வெள்ளையம்மாள்புரத்திலிருந்து போடிக்கு இரு சக்கர வாகனத்தில் அவா் வந்தாா்.

போடி- தேவாரம் சாலையில் சிலமலை எரிபொருள் விற்பனை மையம் அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சின்னமனூா் அருகே உள்ள எரணம்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமாா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.